கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால் நீங்களும் வைத்தியர் தான்… ட்ரை பண்ணுங்க…

கழுத்துக்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால் நீங்களும் வைத்தியர் தான்… ட்ரை பண்ணுங்க…

நம் உடலில் உள்ள அழுத்தப் புள்ளிகள் குறித்து தெரியுமா? இந்த அழுத்தப் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சினைகளைத் தடுக்கலாம். இம்மாதிரியான வைத்தியங்கள் சீனாவில் மிகவும் பிரபலமானது.

அந்த வகையில் நம் உடலில் கழுத்தின் பின்புற மையத்தில் ஒரு அழுத்தப் புள்ளி உள்ளது. இதனை ‘ஃபெங் ஃபூ'(feng fu) என்று அழைப்பர். சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்த ஃபெங் ஃபூ புள்ளியில் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்தால், உடலினுள் உள்ள ஒரு சில பிரச்சினைகள் நீங்கும். அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

  • உங்களால் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லையா? அப்படியெனில் feng fu புள்ளியில் ஐஸ் கட்டியை தினமும் 20 நிமிடங்கள் வைப்பதன் மூலம், இரவில் நல்ல தூக்கத்தைப் பெற முடியும்.
  • செரிமான பிரச்சினையால் கஷ்டப்படுகிறீர்களா? இந்த feng fu புள்ளியில் ஐஸ் கட்டியை வைத்தால், உங்களது செரிமான மண்டலத்தின் இயக்கம் சீராகும்.
  • அடிக்கடி உங்களுக்கு சளி பிடிக்கிறதா? கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள். இதன் மூலம் சளித் தொல்லையில் இருந்து நிச்சயம் விடுபடுவீர்கள்.
  • கழுத்திற்கு பின் தினமும் இரண்டு முறை ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைப்பதன் மூலம், மூச்சு கோளாறு நீங்கும் மற்றும் இதய செயல்பாடு மேம்படும்.
  • தலைவலி, பல் வலி மற்றும் மூட்டு வலி உங்களுக்கு உள்ளதா? இந்த பிரச்சினைகளுக்கும் இந்த feng fu ஐஸ் கட்டி முறை உடனடி நிவாரணம் வழங்கும்.
  • நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், முதுகுத் தண்டு பிரச்சினைகள் போன்றவற்றை feng fu ஐஸ் கட்டி முறை குணமாக்கும்.
  • தைராய்டு பிரச்சினையால் பெண்கள் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இந்த தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குவதற்கு தினமும் கழுத்திற்கு பின் ஐஸ் கட்டியை 20 நிமிடம் வைத்து வாருங்கள்.
  • ஆர்த்ரிடிஸ், உயர் மற்றும் தாழ் இரத்த அழுத்த பிரச்சினைகள் இருந்தால், அதனை feng fu ஐஸ் கட்டி முறையை தினமும் செய்வதன் மூலம் சரி செய்ய முடியும்.
  • ஆஸ்துமா இருப்பவர்கள் தினமும் feng fu ஐஸ் கட்டி முறையை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • கழுத்தின் பின் ஐஸ் கட்டியை வைப்பதனால், இரைப்பை கோளாறுகள், உடல் பருமன், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகள் நீங்கும்.
  • மாதவிடாய் கோளாறுகள், ஆண்மையின்மை, கருவுறுதலில் உள்ள பிரச்சினை போன்றவற்றை இந்த முறையை செய்வதன் மூலம் சரி செய்ய முடியும்.
  • உள உணர்ச்சி கோளாறுகள், மன இறுக்கம், நாள்பட்ட சோர்வு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவையும் feng fu ஐஸ் கட்டி முறையின் மூலம் சரிசெய்யலாம்.