தென்கொரியாவின் அதிபர் பதவியில் இருந்து நீக்கம்…

தென்கொரியாவின் அதிபர் பதவியில் இருந்து நீக்கம்…

தென்கொரியாவின் அதிபர் பார்க் குன் ஹெவை பதவியில் இருந்து நீக்கிடும் நாடாளுமன்றத்தின் தீர்மானத்தை அந்நாட்டின் உயரிய நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நாட்டின் விவகாரங்களில் தன்னுடைய நெருங்கிய தோழி சோய் சூன்-சில்லை தலையிட அனுமதித்தன் மூலம், பார்க் குன் ஹெ சட்டத்தை மீறியுள்ளார் என்று இந்த அரசியல் சாசன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனால், இன்னும் 60 நாட்களுக்குள் தென் கொரியாவில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தென் கொரியாவின் முதலாவது பெண் அதிபராக புகழ் பெற்ற பார்க் குன் ஹெ, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்தில் இருந்து நீக்கப்படும் முதலாவது தலைவராகவும் மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)