தேர்வுக்குழு அதிகாரிகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் குறித்து தரங்க info இற்கு கருத்து…

தேர்வுக்குழு அதிகாரிகள் மற்றும் ஏற்ற இறக்கங்கள் குறித்து தரங்க info இற்கு கருத்து…

கடந்த 8 மாதங்களுள் தொடர்ந்தும் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு தன்னை தேர்ந்தெடுத்ததால் தனது துடுப்பாட்டம் வலுவான நிலையில் உள்ளதாக cric info இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

“தேர்வுக் குழு உறுப்பினர்களுக்கு என்னில் நம்பிக்கை இருப்பதாக நினைக்கின்றேன். குறிப்பாக சிம்பாவ்பே அணிக்கு எதிரான போட்டியின் போது திறமையான பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எனக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டது. அது எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது எனலாம்….”

“கடந்த இரண்டு மூன்று வருடங்களாக என்னை அணியில் இடைக்கிடையே தான் சேர்த்தார்கள்.. ஒரு போட்டியில் விளையாடினால் அடுத்த போட்டியில் நீக்கப்படுவேன். வீரர் என்ற முறையில் அவ்வாறு நடாத்தப்படுவதால் தன்னம்பிக்கையினை இழக்கவும் நேரிடும்.. ”

பொதுவாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவே தரங்க களமிறக்கப்படுவது வழமை. கடந்த போட்டிகளில் குறித்த முறை மாற்றப்பட்டுள்ளதாகவும் உபுல் தரங்க cric info தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

“துடுப்பாட்ட வரிசையில் மாற்றம் ஏற்படுத்துவது வீரர்களுக்கு கடினமானதொன்றே.. ஏனெனில், ஆரம்ப துடுப்பாட்டம் மற்றும் இடைத்துடுப்பாட்ட வீரர்களுக்கு இடையில் விளையாடுவது இரு விதமாகும். வீரர் என்ற வகையில் நான் தொடர்ந்தும் ஒரு நிலையில் விளையாட விரும்புகிறேன். அதாவது ஆரம்ப துடுப்பாட்ட வீரராக, என்றாலும் அணி வெற்றி பெற்றால் போதும்..” என தெரிவித்துள்ளார்.

(rizmira)