பங்களாதேஷ் அணியின் 100வது டெஸ்ட் போட்டி இன்று.. பங்களாதேஷ் விக்கெட் காப்பாளர் நீக்கம்…

பங்களாதேஷ் அணியின் 100வது டெஸ்ட் போட்டி இன்று.. பங்களாதேஷ் விக்கெட் காப்பாளர் நீக்கம்…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று(15) நடைபெறவுள்ளது.

கொழும்பு பி. சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு குறித்த இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

ரங்கன ஹேரத் தலைமையில் இலங்கை அணியும், முஷ்பிகுர் ரஹிம் தலைமையில் பங்களாதேஷ் அணியும் களமிறங்க உள்ளன.

நேற்றைய பயிற்சியின்போது பங்களாதேஷ் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான லிட்டன் தாஸ் காயமடைந்துள்ளதால், அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இன்றைய போட்டி பங்களாதேஷ் அணியின் 100வது டெஸ்ட் போட்டியாகும்.

இந்த நிலையில் பங்களாதேஸ் அணி இந்த போட்டியின் வெற்றிக்காக தீவிர முயற்சியை மேற்கொள்ளும் என்று, அதன் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 1 : 0 என்ற அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)