நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரே நாளில் நிறுவ கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை…

நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை ஒரே நாளில் நிறுவ கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை…

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பங்கு பற்றுதலுடன் இம்மாதம் 28 ஆம் திகதி நாடு முழுவதிலும் 50 சதொச விற்பனை நிலையங்களை திறந்து வைக்க கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் முடிவு செய்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறைக்கான கொள்கையைத் தயாரிக்கும் வகையிலான இறுதிக் கட்ட மாநாடு நேற்று(20) பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது கலந்து கொண்டிருந்த அமைச்சர் றிஷாத் இங்கு கூறுகையில்;

“…இவ்வருட இறுதிக்குள் 500 சதொச விற்பனை நிலையங்கள் திறந்து வைக்கும் அரசின் இலக்கு நிறைவு பெற்ற பின்னர் சதொச கிளைகள் திறந்து வைக்கப்படுவதை நிறுத்தி அங்கீகரிக்கும் முகவர்கள் ஊடாக சதொசவுடன் இணைந்து நாடு முழுவதிலும் அத்தியாவசியப் பொருட்களை ஒரே விலையிலும் மற்றும் சாதாரண விலையிலும் நுகர்வோருக்கு வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

சதொச நிறுவனத்தை இன்னும் 2 மாதங்களுக்குள் முழுமையாக கணணி மயப்படுத்தி வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களையும் நிர்வாகத்தையும் இலகுபடுத்துவதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன..” என தெரிவித்திருந்தார்.

(rizmira)