பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து குசல் விலகல்…?

பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரிலிருந்து குசல் விலகல்…?

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(22) பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது அவரின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இவர் விளையாட முடியாத நிலை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய பயிற்சி போட்டியின் போது குசல் பெரேரா 64 ஓட்டங்களை பெற்ற வேளை மைதானத்திலிருந்து வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)