அணியில் பல மாற்றங்களுடன் இன்று களமிறங்குகிறது இலங்கை அணியினர்…

அணியில் பல மாற்றங்களுடன் இன்று களமிறங்குகிறது இலங்கை அணியினர்…

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(28) நடைபெறவுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் நிரோசன் திக்வெல்ல இற்குப் பதிலாக தில்ருவான் பெரேரா இணைக்கப்பட்டுள்ளார்.

மேலும் வேகபந்து வீச்சாளர்காளான நுவான் குலசேகர மற்றும் நுவான் பிரதீப் ஆகியோரும் அணியில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

பங்களாதேஷ் அணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தம்புள்ளை மைதானத்தில் இறுதியாக விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்த தொடரை பங்களாதேஷ் கைப்பற்றும் பட்சத்தில், ஒருநாள் தரவரிசையில் ஆறாம் இடத்துக்கு முன்னேறும். அதேநேரம் இலங்கை 7ம் இடத்தைப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)