அகத்தின் அழகு முகத்தில் தெரியனுமா.. ? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

அகத்தின் அழகு முகத்தில் தெரியனுமா.. ? அப்போ இதை ட்ரை பண்ணுங்க..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மைதான். நல்ல அன்பான மனதின் வெளிப்பாடு அவர்களின் முகத்தில் பிரதிபலிக்கும். அதோடு போதும் என்று திருப்திப்படாமல் கொஞ்சம் வீட்டில் வாரம் ஒருமுறை முகத்தை பராமரித்துப் பாருங்கள்.

கருமை மறைந்து பளிச்சிட மாஸ்க் :

தேவையானவை :
மஞ்சள் பொடி – 1 ஸ்பூன்
தேன்- 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்

செய்முறை :
எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பிரஷ் கொண்டு தடவவும். இதனால் நன்றாக சருமத்தில் பரவும். 20-30 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்தால் வெயிலினால் கருமையடைந்த முகம் நிறம் பெறும். பளிச்சிடும். வறண்ட சருமம் பெற்றவரள் இந்த கலவையுடன் ஃப்ரெஷ் க்ரீம் அல்லது ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன் கலந்து கொள்ளலாம்.

(rizmira)