சூரியகாந்தி எண்ணெய் முகத்தை பளிச்சென மாற்றுமா…?

சூரியகாந்தி எண்ணெய் முகத்தை பளிச்சென மாற்றுமா…?

சூரியகாந்தி எண்ணெயை சமைப்பதற்காக பயன்படுத்தி இருப்போம் ஆனால் இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது என தெரியுமா? இது என்னென்ன சரும பிரச்சினைகளை போக்குகிறது என பார்க்கலாம்..

1. முகப்பரு

முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளை சூரியகாந்தி எண்ணெய் எதிர்த்து போராடுகிறது. யோகார்ட், இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஒரு டிஸ்பூன் விளக்கெண்ணையை முகத்தில் 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

யோகார்ட், இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஒரு டிஸ்பூன் விளக்கெண்ணையை முகத்தில் 10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும்.

2. முக சுருக்கம் நீங்க

இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய்யை ஒரு டிஸ்பூன் கற்றாளை ஜெல் மற்றும் இலவங்க பட்டையை சேர்ந்து முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்து அதை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

3. வெயிலால் உண்டான கருமை

அதிகமாக வெயிலில் செல்வதால் முகத்தில் கருமை உண்டாகும். இதற்கு ஒரு கப் ஆப்பிள் சீடர் வினிகரில் இரண்டு டிஸ்பூன் சூரியகாந்தி எண்ணெய் மற்றும் ஒரு டிஸ்பூன் கற்றாளை ஜெல் ஆகியவற்றை கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

(rizmira)