எபோலாவை தொடர்ந்து கினியா நாட்டில் பரவும் மலேரியா

எபோலாவை தொடர்ந்து கினியா நாட்டில் பரவும் மலேரியா

ஆப்பிரிக்க நாடான கினியாவில், எபோலா நோய் தாக்கி சுமார் 2500க்கும் மேற்பட்டோர் பலியானர்கள். தற்போது அங்கு எபோலா நோய் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்நிலையில், கினியா நாட்டில் திடீரென மலேரியா நோய் பரவ தொடங்கியுள்ளது. பெரும்பாலான மக்கள் மலேரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எபோலா நோய் பாதிப்பால் அங்கிருந்த மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதால், மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.

இதுவரை அங்கு 74 ஆயிரம் பேரை மலேரியா  நோய் தாக்கி உள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.