ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

ரயில் வீதியில் செல்பி எடுப்பவர்கள் நீதிமன்ற முன்னிலையில்..

ரயில் வீதியில் நின்று கையடக்கத் தொலைபேசியில் “செல்பி” எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே சட்டக் கோவையின் பிரகாரம் ரயில் பாதையில் ஆபத்தான விதத்தில் நடந்து செல்வதும் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரயில் பாதையில் இருந்து செல்பி எடுப்பதைத் தடுத்திருந்தும், சில இளைஞர்கள் அச்சட்டத்தைப் பொருட்படுத்தாது செயற்பட்டு வருவதாகவும் இதலால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இவ்வருடத்தில் ரயில் பாதையில் இருந்து செல்பி எடுக்க முற்பட்ட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)