நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.. – JVP கோரிக்கை..

நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்.. – JVP கோரிக்கை..

ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளது.

நேற்று(05) நாடாளுமன்ற விவாதத்தில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டார்.

கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, சட்டமா அதிபர் திணைக்களத்தையும் பொலிஸ் திணைக்களத்தையும் தனக்கு கீழ் கொண்டுவருமாறும், திருடர்களை பிடித்துக் காட்டுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், குறித்த இரு திணைக்களங்களை நிர்வகிக்கும் அமைச்சுக்கள் மீதான அதிருப்தி காரணமாகவே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளாரென தெரிவித்த அநுர, ஜனாதிபதியின் இக்கூற்றின் மூலம் இந்த அரசு திருடர்களை பாதுகாத்து வருகின்றது என்பதும் புலனாகின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.

ஊழல் மோசடிக்காரர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க, நீதி மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.

 

(rizmira)