இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதி சந்திப்பு..

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதி சந்திப்பு..

இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று(11) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி செயலக ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இதுவெனவும் அதனைக் குறிக்கும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி வழங்கி வைத்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

(rizmira)