பாண்டா வடிவத்தில் இராட்சத சோலார் பண்ணை அமைக்கிறது சீனா…

பாண்டா வடிவத்தில் இராட்சத சோலார் பண்ணை அமைக்கிறது சீனா…

சீனாவின் மிகப்பெரிய சோலார் நிறுவனம், வேடிக்கையாக இராட்சத பாண்டா வடிவத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின்சக்தி பண்ணையை அமைத்துள்ளது.

புவி வெப்ப மயமாதலை தடுக்க அனைத்து நாடுகளும் அனல் மின் நிலையும், அணுமின் நிலையத்தில் இருந்து சூரிய சக்தியின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையாக சோலார் மின்திட்டத்திற்கு மாறி வருகின்றன.

அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பயன்படுத்துவதால் அதில் இதிருந்து வெளிப்படும் கார்பன் வாயு புவியை வெப்பமடையச் செய்கிறது. அதேபோல்தான் அணுமின் நிலையத்தில் அணுவை பிளக்கும் போது புவியின் வெப்பத்தன்மை அதிகரிக்கிறது.

மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா, சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிப்பதில் மும்முரமாக இயங்கி வருகிறது.

அதன்படி இராட்சத பாண்டா கரடி வடிவத்தில் சோலார் பண்ணையை உருவாக்கியுள்ளது. 50Mw மின்சாரம் தயாரிப்பதற்கான முதற்கட்ட வேலைகள் கடந்த ஜூன் மாதம் முடிக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக உள்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மின்சாரம் சீனாவின் வடமேற்கு மின்பகிர்மான தடத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் 25 வருடத்திற்குள் மணிக்கு 3.2 பில்லியன் Kw மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் இராட்சத பாண்டா வடிவிலான சோலார் பண்ணை நிறைவுபெறும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.

3.2 மில்லியன் Kw மின்சாரம் தயாரிக்கும் பணி முழுவதும் முடிவடைந்தபின், 2.74 மில்லியன் டன் கார்பன் மாசுபாடு குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)