காதலி கொடுத்த முத்தத்தால்  அமெரிக்க பிரபலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க தடை…

காதலி கொடுத்த முத்தத்தால் அமெரிக்க பிரபலத்திற்கு போட்டிகளில் பங்கேற்க தடை…

காதலி கொடுத்த முத்தம் காரணமாக அமெரிக்காவின் ஒலிம்பிக் சம்பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் ஓட்டப் பந்தய வீரரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.

அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளாரா என்பதை பரிசோதனை செய்வதற்காக அவரிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டது.

அவரிடம் எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில், தடை செய்யப்பட்ட மருந்தான புரொபெனெசிட்’ஐ பயன்படுத்தியமை தெரிய வந்தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திகதியிலிருந்து கில் ரொபர்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்காவின் ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம், அவரது உடலில் புரோபெனெசிட் எப்படி வந்தது என்பதை விவரித்துள்ளது.

பில் ரொபர்ட்ஸின் காதலி அலெக்ஸ் சலாசர். ரொபர்ட்ஸிற்கு பரிசோதனை மாதிரி எடுப்பதற்கு முன்பு சலாசர் சைனஸ் பிரச்சினை காரணமாக புரொபெனெசிட்டை பயன்படுத்தியுள்ளார்.

பரிசோதனை மாதிரி எடுக்கும் அன்று ரொபர்ட்ஸ் தனது காதலிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அவர்கள் சந்திக்கும்போதெல்லாம் ரொபர்ட்ஸ், தனது காதலிக்கு தொடர்ந்து முத்தம் கொடுத்துள்ளார். இதனால் அவரது உடலில் அந்த மருந்து
சேர்ந்துள்ளது என்று அமெரிக்க தீர்ப்பாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனது காதலி மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தமை எனக்குத் தெரியாது. முத்தம் கொடுத்தால் தடை வரை செல்லும் என்பது குறித்து நான் அறிந்திருக்கவில்லை என்று ரொபர்ட்ஸ் கூறியுள்ளார்.

 

(rizmira)