உங்கள் முகம் பளீச் பளிச்சென்று மின்னனுமா?

உங்கள் முகம் பளீச் பளிச்சென்று மின்னனுமா?

கிவி பழம் முகத்தை பளிச்சென்று மாற்றுவதில் மிகவும் சிறந்தது. இதில் உள்ள விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உங்கள் சருமத்தை மிருதுவாகவும் பளிச்சென்றும் மாற்றுகிறது. மேலும் இதில் அடங்கியுள்ள என்ஜைம்கள் சருமத்தில் ஏற்படும் நோய் தொற்றை சரி செய்கிறது.

கிவி பழத்தில் உள்ள தாதுக்கள் சரும ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் ஈ சருமம் வயதாவதிலிருந்து தடுக்கிறது. எனவே கிவி பழத்தை உங்கள் அழகுக்கு பயன்படுத்தி பலன் பெறுங்கள். இப்பொழுது உங்களுக்கு தேவையான கிவி பேஸ் மாஸ்க்கை வீட்டிலேயே எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.

 (குறிப்பு : கிவி பழம் உங்களுக்கு அழற்சி என்றால் வேறு பழத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள்.)

கிவி மற்றும் யோகார்ட் பேஸ் மாஸ்க்

கிவி மற்றும் யோகார்ட் உங்கள் முகப் பொலிவிற்கு சிறந்த ஒன்றாகும். கிவியில் உள்ள லாக்டிக் அமிலம் இயற்கையாகவே உங்கள் சருமத்தை பொலிவாக்குகிறது. மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறையச் செய்கிறது.

செய்முறை :

பாதி கிவி பழத்தை எடுத்து நன்றாக பேஸ்ட் மாதிரி பிசைந்து கொள்ளவும்.

இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் யோகார்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

கிவி மற்றும் ஆப்பிள் பேஸ் மாஸ்க் :

இந்த பேஸ் மாஸ்க் வறண்ட மற்றும் பொலிவற்ற முகத்திற்கு உகந்தது. இந்த பேஸ் மாஸ்க் உங்கள் சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகப்படுத்தி ஜொலிக்கும் முகத்தை தருகிறது.

செய்முறை :

பாதி கிவி பழம் மற்றும் பாதி ஆப்பிள் பழத்தை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவவும்.

20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

 

கிவி மற்றும் பாதாம் பேஸ் மாஸ்க் :

கிவி பழத்தில் உள்ள விட்டமின் சி யும் பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களும் உங்கள் முகத்தை ஆரோக்கியமாக மாற்றுகின்றன.

செய்முறை :

6-8 பாதாம் பருப்புகளை எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊற வைத்த பருப்பை மி”ில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்துக் கொள்ளவும்.

இதனுடன் கிவி பேஸ்ட்டை கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

 

கிவி மற்றும் வாழைப்பழம் பேஸ் மாஸ்க் :

இந்த பேஸ் மாஸ்க் பருக்கள் மற்றும் எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு ஏற்றது.

செய்முறை :

பாதி கிவி மற்றும் பாதி வாழைப்பழத்தை பேஸ்ட் மாதிரி செய்து கொள்ளவும்.

இதனுடன் யோகார்ட் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்

 

கிவி மற்றும் அவகேடா பேஸ் மாஸ்க் :

கிவி மற்றும் அவகேடாவில் விட்டமின் ஏ, சி மற்றும் ஈ உள்ளது. இந்த சத்துக்கள் முகத்தை அழகாக்கும்.

செய்முறை :

அவகேடாவை நன்றாக பிசைந்து அதனுடன் பாதி கிவி பழத்தை சேர்த்துக் கொள்ளவும்.

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் யோகார்ட், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்த்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும்.

சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்