மீன்கள் சாப்பிடுவதில் கவனம் தேவை..

மீன்கள் சாப்பிடுவதில் கவனம் தேவை..

கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.

தினமும் அல்லது வாரம் ஒருமுறை மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

மீன்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
  • மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டானது, நம் உடலுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று. இது உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.
  • ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், ஆஸ்துமாவின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
  • மீன்களில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், மூளைச் செல்கள் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  • பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்தை 30-50 சதவீதம் குறைக்கிறது. அதிலும் வாய், குடல், மார்பகம், கருப்பை மற்றும் புரோஸ்டேட் போன்ற உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் தாக்கம் குறைக்கிறது.
  • வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி, இதயநோய் மற்றும் நீரிழிவு போன்ற பிரச்சனையை தடுத்து, பொலிவான சருமத்தை பெறலாம்.
மீன்கள் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து?

மீன் சிறந்த உணவாக இருந்தாலும், மீன்கள் வளரும் சூழ்நிலை மற்றும் அதன் சுகாதாரத்தை பொருத்து, உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.

சமைக்கப்பட்ட சில மீன்களை அதிகம் சாப்பிடுவதால், மீன்களில் உள்ள நாடாப்புழுக்கள் நம் உடலில் சேரும் அபாயம் உள்ளது.

மேலும் இவை மனித சிறுகுடலில் தங்கி, ரத்தசோகையை பிரச்சனையை ஏற்படுத்தும்.