தூக்கம் இல்லையா? அப்போ ஜாக்கிரதை!

தூக்கம் இல்லையா? அப்போ ஜாக்கிரதை!

தூக்கமின்மைக்கான பல காரணங்களை நாம் பார்த்து இருக்கிறோம். இன்று தூக்கமின்மை பலருக்கு பெரும் பிரச்சினையாகவே இருக்கிறது.

காலை முதல் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் மூளைக்கு ஓய்வு கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலில் தான் முடியும். சிலர் இரவு முழுவதும் கூட தூக்கம் வராமல் அவதிப்படுகின்றனர். இந்த தூக்கமின்மை பக்கவாதம் மற்றும் மாரடைப்பிற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

ஆய்வுகள்:!

மொத்தமாக இது பற்றி 15 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 160,98 பேர் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இதில் 11,702 பேர் கார்டிவாஸ்குலர் இதய நோய் அல்லது கரோனரி இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்கள் அனைவருக்கும் தூக்கமின்மை பிரச்சனை உள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அவதியான தூக்கம்! சிலர் அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே எழுந்துவிடுகிறார்கள். சில தூங்கும் நேரத்தில், விளித்துக்கொண்டு மீண்டும் தூங்க வெகு நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

விளைவுகள்:

தூக்கமின்மை உடலின் மெட்டபாலிசத்தை பாதிக்கச்செய்கிறது. இதன் விளைவாக, இது இரத்த அழுத்தம், அத்துடன் அழற்சி மற்றும் அழற்சிக்குரிய சைட்டோகீன்களை மாற்றியமைக்கிறது. அனைத்து பெருமூளை அல்லது கரோனரி இன்ஃப்ராஷனை உண்டாக்குகின்றன. ஆனால், தூக்கமின்மை பிரச்சனை அனைவருக்கும் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்ப்படுத்துவது இல்லை

பெண்கள்!

பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும், மன உலைச்சலின் காரணமாகவும் தூக்கமின்மைக்கு ஆளாகின்றனர். எனவே நாம் அனைவரும் போதிய அளவு தூக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். முக்கியமாக பெண்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இதை செய்ய வேண்டாம் :

உங்களுக்கு தூக்கம் வராமல், படுக்கைக்கு செல்ல வேண்டாம். இது போன்று தூக்கம் வரும் முன்னரே படுக்கைக்கு செல்வதும் தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

புத்தகம் படிக்கலாம்:

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள், தூக்கம் வரும் வரை கணினி, டிவி போன்றவற்றை பார்ப்பதை தவிர்த்து, புத்தகங்களை படிக்கலாம். இது தூக்கம் வரவும், மனதை ரிலாக்ஸ் செய்யவும் உதவிகரமாக அமையும்.