உலக பதினொருவர் அணியின் தலைமைக்கு அம்லா மற்றும் டு பிளெஸி பரிந்துரை..

உலக பதினொருவர் அணியின் தலைமைக்கு அம்லா மற்றும் டு பிளெஸி பரிந்துரை..

பாகிஸ்தானில் எதிர்வரும் செப்டெம்பரில் இடம்பெறவுள்ள, உலக பதினொருவர் அணியின் தலைவராக, தென்னாபிரிக்க அணியின் ஹஷிம் அம்லா அல்லது அவ்வணியின் டெஸ்ட் தலைவர் ஃபப் டு பிளெஸி ஆகியோர் செயற்படுவர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வட்டாரங்கள் நேற்று(22) தெரிவித்துள்ளன.

குறித்த இந்தத் தொடர் பற்றிய உத்தியோகபூர்வமான அறிவிப்பு, நேற்று முன்தினம்(21) வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே ஆகிய அணிகளைச் சேர்ந்த வீரர்கள், இந்தத் தொடரில் விளையாடச் சம்மதித்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஹஷிம் அம்லாவும் ஃபப் டு பிளெஸியும், இந்தத் தொடரில் விளையாடச் சம்மதித்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இந்தத் தொடருக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பாகவும் காப்புறுதி சம்பந்தமான விடயங்கள் தொடர்பாகவும், சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும், இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகளின் ஈடுபட்டு வருகின்றன என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இந்தத் தொடர் செப்டெம்பர் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)