மாதுளம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

மாதுளம்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

எந்தக் காலத்திலும்  கிடைக்கும் பழங்களில் முத்தான பழம் மாதுளை. பழம். அரிய மருத்துவ குணம் கொண்ட பழமென மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பழங்களில், முக்கிய இடம் பிடிக்கிறது.

மாதுளை முத்துகளை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் குறைந்து விடும். இரத்த நாளங்களில் கொழுப்பு, அல்லது ஒருவிதமான கறைபடிந்து அடைத்து கொண்டால், இரத்த ஓட்டம் தடைப்படும். அப்போது, இருதய பாதிப்பு ஏற்படும்.

இது, அதிக உணவு உண்ணுவதால் ஏற்படுகிறது. இதற்கு அவ்வப்போது மாதுளம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும், இரத்தத்தை சுத்தப்படுத்தி, நல்ல இரத்தம் அதிகரிக்கும்.

வாதம், கபம், அஜீரணம், வீக்கம், வலி இவைகள் நீங்க, மாதுளம்பழம் சிறந்த உணவாகும். தாதுபுஷ்டிக்கு இது நல்ல மருந்தாகும். உடலை மினுமினுப்பாக்கி அதை  ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க மாதுளம்பழம் உதவுகிறது.

மாதுளை நெஞ்சு வலிக்கு நல்லது. மேலும், தொண்டைக்  கரகரப்பை நீக்கி குரல் இனிமைபெற உதவும். சிலருக்கு தலையில் புழுவெட்டு இருந்தால், முடி ஏராளமாக உதிரும். இதை சரி செய்யும் தன்மை, மாதுளைக்கு உண்டு. புளிப்பு ரக மாதுளம்பழத்திலிருந்து மூன்று மேசைக் கரண்டி அளவு  சாறு எடுத்து, அதை தலை முழுவதும் எண்ணெய் தடவுவது போல பரவலாகத்  தடவ வேண்டும்.

மூன்று மேசைக் கரண்டி வெந்தயம், இரண்டு மேசைக் கரண்டி துவரம் பருப்பு இரண்டையும் முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊறவைத்து, மறுநாள் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுதை வைத்து தலையை அலச வேண்டும். இப்படி தொடர்ந்து, 10 நாட்கள் குளித்து வந்தால், முடி உதிர்வது நின்று, நன்றாக வளர ஆரம்பிக்கும்.

மாதுளம்பழத்தின் தோல் பகுதியை நன்றாகக் காய வைத்து பவுடராக்க வேண்டும். இதனுடன் பயத்தம்பருப்பு பவுடரை சம அளவு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் குளித்த பிறகு, உடலில் இந்த பவுடரை பூசி கழுவ வேண்டும். துர்நாற்றம் நீங்குவதுடன் உடலும் குளிர்ச்சியாகி விடும்.

ஒரு மேசைக் கரண்டி மாதுளைச் சாறு, அரை மேசைக் கரண்டி சந்தனம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தில் பளபளப்பு கூடும். சருமத்தின் சுருக்கத்தைப் போக்குவதிலும் மாதுளைக்கு முக்கிய பங்குண்டு. மாதுளம்பழ விழுதையும் வெண்ணெயையும், தலா ஒரு மேசைக் கரண்டி எடுத்து நன்றாகக் குழைக்க வேண்டும்.

தோலில் தொய்வு ஏற்பட்டிருக்கும் இடத்தில் இந்த பேஸ்ட்டை தடவி, பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தினமும் இப்படிச் செய்தால் தோல் சுருக்கம் நீங்கும். பருவே வராமல் தடுக்கும் மந்திரமும் மாதுளைக்கு இருக்கிறது. ஒரு மேசைக் கரண்டி மாதுளை சாறுடன், ஒரு டீஸ்பூன் வெட்டிவேர் பவுடர் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின் கழுவி வந்தால், பருக்கள் நெருங்காது