மழைக்காலத்தில் பாதங்களை பராமரிக்க டிப்ஸ்

மழைக்காலத்தில் பாதங்களை பராமரிக்க டிப்ஸ்

மழைக்காலங்கள் இனிமையான அனுபவத்தை தருவது உண்மை தான் . ஆனால் மழைக்காலத்தில் சருமத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டு நம் அழகை பாதிக்கின்றன..

மழைக்காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாவது நமது பாதங்கள். சேறு மற்றும் அழுக்குகளில் நடப்பதால் பாதங்களில் பலவித நோய் தோற்று ஏற்படுகிறது. ஆனால் நாம் பாதங்களின் வலிகளையும் பாதிப்புகளையும் புறக்கணிக்கிறோம்.

மேலும் இவை அதிகமாகி பாத வெடிப்பு, உடையும் நகங்கள் மற்றும் நடக்க முடியாத அளவுக்கு பாதங்களில் சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றை தடுப்பதற்கு, வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டே நம் பாதங்களை எப்படி பராமரிக்கலாம்..?

தோல் உரிதலுக்கு:

எலுமிச்சை ஒரு இயற்கை ஸ்க்ரப் ஆகும். இது பாதங்களின் தோல் உரிவதையும் தோல் வறண்டு இருப்பதையும் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து தளர்ந்த பாதங்களில் தேய்க்கும் போது அதன் ஈரப்பதம் அதிகரிக்கிறது. சாலையில் மழை நீரில் நடப்பதனால் பாதங்களில் ஒரு வித துர்நாற்றம் வீசலாம். ஒரு பெரிய டப்பில் வெதுவெதுப்பான நீரை எடுத்து அதில் சிறிது எலுமிச்சை சாறை சேர்த்து கொள்ளவும். இந்த நீரில் துர்நாற்றம் வீசும் பாதங்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கலாம்.

வறட்சியை நீக்க:

3 கப் வெதுவெதுப்பான பாலுடன் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலக்க வேண்டும். இந்த கலவையை ஒரு டப்பில் ஊற்றி அதில் கால்களை நனைய விடவும். 10நிமிடங்கள் நன்றாக ஊறிய பின் பாதங்களை அதிலிருந்து எடுக்கவும்.பின்பு வெந்நீரில் பாதங்களை சுத்தம் செய்யவும்.இதன் மூலம் வறட்சி நீங்கி பாதங்கள் பொலிவு பெறும்.
வெடிப்புகளை தவிர்க்க:

பாதங்களில் ஏற்படும் வெடிப்பினால் வலி உண்டாகிறது. அந்த வலியை குறைக்க தேங்காய் எண்ணையை வெடிப்பு உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்தவுடன் கால்களில் சாக்ஸ் அணிவதால் சருமம் எண்ணையை முழுதுமாக உறிஞ்சி கொள்கிறது

ஆரஞ்சு மாஸ்க்:

ஆரஞ்சு பழத் தோல் பவுடர், பால் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை பாதங்களில் தேய்த்து 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு வெந்நீரில் பாதங்களை கழுவவும் . இதன் மூலம் பாதங்கள் அழகாக காட்சியளிக்கும்.