காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்

காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் மீண்டும் பயன்படுத்த சில டிப்ஸ்

தற்போது பெண்கள் தங்களை அழகாக வெளிக்காட்ட அழகு சாதனப் பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.  விலை அதிகம் கொடுத்து வாங்கிய அழகு சாதனப் பொருட்கள் காலாவதியாகிவிட்டால், அதனை தூக்கிப் போட பலருக்கும் விருப்பம் இருக்காது.

அதிலும் அவ்வளவு பணம் செலவழித்து வாங்கிய அழகு சாதனப் பொருட்கள் தீர்ந்து போகாமல், அதன் திகதி  காலாவதியாகிவிட்டால், யாருக்கு தான் வலிக்காது. ஆகவே காலாவதியான அழகு சாதனப் பொருட்களை தூக்கி எறியாமல் எப்படி வித்தியாசமான வழியில் பயன்படுத்துவது என்று பார்க்கலாம்

வாசனை திரவியங்கள்:
வாசனை திரவியங்கள் வாங்கி, அதன் திகதி  காலாவதியாகிவிட்டால், அதனை படுக்கை அறை, குளியலறை, கார் போன்றவற்றில் ஏர் ப்ரெஷ்னராகப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால், அதனை ஒரு காட்டனில் நனைத்து, விளக்கு, டேபிள் அல்லது காற்றாடி போன்றவற்றை துடைத்தால், வீடு நல்ல மணத்துடன் இருக்கும்.

லிப்ஸ்டிக்:
வாங்கி நீண்ட நாட்கள் ஆன லிப்ஸ்டிக்கை தூக்கிப் போடாமல், அதனை மீண்டும் பயன்படுத்த நினைத்தால், மார்க்கராகப் பயன்படுத்தலாம்.

நெயில் பாலிஷ் :
காலாவதியான நெயில் பாலிஷை மீண்டும் பயன்படுத்த வேண்டுமெனில், அதனை மார்க்கர் அல்லது சீலராகப் பயன்படுத்தலாம். அதிலும் நீங்கள் ஒரு அழகான கலைநயமாக ஏதேனும் ஒன்றை செய்தால், அதனை நெயில் பாலிஷ் கொண்டு டச்சப் கொடுக்கலாம். இதனால் அது வித்தியாசமான மற்றும் அழகான தோற்றத்தைக் கொடுக்கும்.