ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை எப்படி வசிகரிக்க செய்வது?

ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை எப்படி வசிகரிக்க செய்வது?

ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை எப்படி வசிகரிக்க செய்வதுஐஸ்கட்டிகள் நமது தொண்டைக்கு வேண்டுமானால் கெடுவிளைவிப்பதாக இருக்கலாம். ஆனால் நமது அழகை பாதுகாக்க பயன்படுகிறது.

நாம் தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நமது முகத்தின் வசிகரம் அதிகரிக்கும். சரி, இப்போது ஐஸ்கட்டிகளின் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

முகப்பருக்களை போக்க:

முகப்பருக்கள் நம் அழகை சீரழிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வதால், சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது. முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10/ 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு

தழும்புகள் மறைய:

முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் கருப்பாக முக அழகை கெடுக்கும். கடைகளில் பல க்ரீம்கள் இருந்தாலும் அவை கெமிக்கல்களால் ஆனவை. நீங்கள் கண்ட கண்ட கெமிக்கல்களை பயன்படுத்த தேவையில்லை. தழும்புகளை போக்க ஐஸ்கட்டி ஒன்றே போதுமானது. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.

தோலில் உள்ள துளைகளை நீக்க:

சருமத்தின் துளைகள் பெரிதாக இருப்பதும் முகத்தின் அழகை கெடுக்கும். மேலும் இவை அழுக்குகளை எளிதில் உள்ளிழுக்கும். இதனால் முகப்பருக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. ஐஸ்கட்டிகளை வைப்பதால் இந்த துளைகள் மறையும். தொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை அகற்ற முடியும்.

முகம் பொலிவடைய:

ஸ்ட்ராபெரி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து, அதனை ஐஸ்கட்டியாகும் வரை குளிவிக்க வேண்டும். இந்த ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முகம் பொலிவடையும். மேலும் இந்த மசாஜை வாரம் ஒருமுறை செய்யலாம்

முக சோர்வை போக்க :

வெயிலினால் உங்கள் முகம் சோர்வாக, கலை இழந்து இருக்கும். அப்போது ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.

கண் வீக்கத்தை போக்க:

சரியான தூக்கம் இல்லாத காரணத்தாலோ அல்லது அழுதாலோ கண்கள் வீங்கி முகம் பார்க்க நன்றாக இருக்காது. கண்களை அழகாக்க, காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

கருவளையங்களை போக்க:

கண்களை சுற்றியுள்ள கருவளையகள் முகத்தின் அழகையே கெடுப்பதாக இருக்கும். ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்கயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ்கட்டி ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

மேக்கப் நீடிக்க :

பெரிய சரும துளைகள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை எளிதில் மறைய செய்யும். எனவே மேக்கப் செய்வதற்கு முன்னர் ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வது, அதிக நேரம் மேக்கப் நீடிக்க உதவுகிறது.

முகத்தில் உள்ள தடிப்புகளை போக்க:

முகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் சிவந்து காணப்படும். இதனை சரிசெய்ய முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுக்கவும்.