போக்குவரத்து விதி மீறலுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

போக்குவரத்து விதி மீறலுக்கு எதிராக கடும் நடவடிக்கை..

தமிழகத்தில் இன்று(06) முதல் வாகன சாரதிகள் அசல் சாரதி அனுமதிப்பத்திரம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதியை மீறினால் மோட்டார் வாகன சட்டப்படி ரூ.500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை பொலிஸ் ஆணையாளரும் அசல் சாரதி அனுமதிப்பத்திரம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

6 வகையான போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் சாரதி அனுமதிப்பத்திரங்கள் முதல்கட்டமாக 3 மாதம் தற்காலிகமாக இரத்துசெய்யப்படும் என்றும் 2-வது முறை தவறு செய்தால் 6 மாதங்கள் ஓட்டுனர் உரிமங்கள் இரத்தாகும். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், வீதி சமிக்ஞை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல் போன்ற 6 விதி மீறல்கள் மட்டும் கடுமையான குற்றமாக கருதப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.