குகுலே கங்கையின் வான் கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள அபாயம் நிலவும் பிரதேசங்கள் இவை தான்..

குகுலே கங்கையின் வான் கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ள அபாயம் நிலவும் பிரதேசங்கள் இவை தான்..

நாட்டில் நிலவும் அதிக மழை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவு ஒன்று காலை திறக்கப்பட்டுள்ள நிலையில், அகலவத்தை,வல்லாவிட்ட,பாலிந்தநுவர,இங்கிரிய மற்றும் பதுரலிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமை குறித்து அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் 24 மணிநேர காலப்பகுதிக்குள் நாட்டின் பல பாகங்களுக்கு 150mm அளவிலான மலை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எஹலியகொட பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரதன,மேற்கு கலடுவாவ,தெய்யகள, விலேகொட, போபத்த,அத்கங்குல,மஹாஹர,தலவிடிய மற்றும் அரபொல ஆகிய பிரதேசங்களுக்கும் அயகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட நமுனுதென்ன, கங்கொடகந்த, சிங்கலகொட, கலத்துறை, அவிச்சிகந்த, கவரகிரிய, தும்பரமனான,உடுகள, கோலம்பேவ, உமங்கெதர பிரதேசங்களுக்கும் கொடபொல, பிடபெத்தர ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)