குண்டாக இருப்பவர்களிடம் உடல் துர்நாற்றம் அதிகமாம்? அதை தவிர்க்கும் முறை

குண்டாக இருப்பவர்களிடம் உடல் துர்நாற்றம் அதிகமாம்? அதை தவிர்க்கும் முறை

வெளித்தோற்றத்தில் அழகாக, ஸ்டைலாக இருந்தாலும் உடல் துர்நாற்றம் சுற்றியுள்ளவர்களை முகம் சுழிக்கவைத்து விடுகிறது. உடல் துர்நாற்றம் மனம், உடல் இரண்டும் சம்பந்தப்பட்டதாகும். மனதில் ஏற்படும் பலவகை உணர்ச்சிகளின் காரணமாக வியர்வை நாற்றம் ஏற்படுகிறது.

அதிக சந்தோஷம், துக்கம், பதற்றம் போன்றவற்றின் போது மனம் கட்டுப்பாட்டை மீறுகிறது. அப்போது சுரப்பிகளின் செயல்பாட்டால் திரவங்கள் வெளியேறுகின்றன. இதில் பாக்டீரியாவுடன் வியர்வையும் சேர்வதால் நாற்றம் உருவாகிறது.
குறிப்பாக குண்டாக இருப்பவர்களிடம் பாக்டீரியா செயல்பாடு அதிகமாய் இருப்பதால் நாற்றமும் கூடுதலாகவே இருக்கும்.

இதுபோன்ற நிலையைத் தவிர்க்க கீரைகள், ஆரஞ்சுப்பழம், அன்னாசிப்பழம் நிறைய சாப்பிட வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தி ஆடைகள் வியர்வையை உறிஞ்சும் என்பதால் அவற்றை அணியலாம். பாக்டீரியாக்களை ஒழிக்கும் சவர்காரங்களை உபயோகிக்க வேண்டும். உள்ளங்கால் வியர்வைத் தொல்லை உடையவர்கள் காற்றுப்படும்படியான செருப்புகளையே அணிய வேண்டும்.

கை, கால்களை சுத்தமான நீரில் சவர்காரம் உபயோகித்துக்கழுவி வரவேண்டும். இது போன்ற பல்வேறு செயல்பாடுகளின் மூலம் உடல் துர்நாற்றத்தைப் தவிர்க்கலாம்.