மெக்ஸிகோ நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகள் இவைதான்…

மெக்ஸிகோ நிலநடுக்கத்தினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நாடுகள் இவைதான்…

மெக்ஸிகோவின் தெற்கு கடற்கரை அருகாமையில் இன்று(08) 8.0 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஓன்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து 8 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகள் மெக்ஸிகோ, கொத்மாலாவ, பனாமா, ஏல் செல்வோதொரய, கொஸ்டரிகா, நிகாரகுவா, ஹொன்ரோஸ், எக்குவடோர் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

UPDATE – Friday (2017-09-08)

————————————————

மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பூமியதிர்ச்சியானது 8.0 ரிச்டர் அளவில் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாரிய பூமியதிர்ச்சியையடுத்த தென்னமரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

 

(rizmira)