சீரற்ற காலநிலையினால் டெங்கு பரவும் அபாயம்..

சீரற்ற காலநிலையினால் டெங்கு பரவும் அபாயம்..

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, நாடளாவிய ரீதியில் நுளம்புகள் பெருகும் இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும்படி உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.