அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் ஏற்படும் மாற்றம்..

அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் ஏற்படும் மாற்றம்..

நம்முடைய உணவுகளில் மிக முக்கியமானது அரிசி. தினமும் சமைக்கும் போது அதனை கழுவிய நீரில் ஏராளமான விட்டமின்ஸ், மினரல்ஸ், அமினோ ஆசிட் நிறைந்திருக்கிறது. அது நம் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு பெரிதும் துணை நிற்கும்

அரிசி கழுவிய நீரை முகம் கழுவவோ தலைக்குளிக்கவோ ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்க்கான சில காரணங்கள்

சருமம் :
அரிசி கழுவிய நீரில் இயற்கையாகவே சருமத்தை காப்பாற்றும் சத்துக்கள் இருக்கின்றன. அத்துடன் பருக்கள் ஏற்படாமலும் தடுத்திடும். தளர்ந்திருக்கும் சருமத்தை டைட் செய்திடும்.

பேஷியல் :
இதனை தினமும் பேஷியல் க்ளன்சராக பயன்படுத்தலாம். சிறிய துணியிலோ அல்லது காட்டனை அரிசி கழுவிய நீரில் முக்கியெடுத்து முகத்தை துடைத்திடுங்கள்.சிறிது நேரத்தில் தானாக காய்ந்ததும் முகத்தை கழுவ வேண்டாம். அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் நேரடியாக சருமத்தில் விணை புரியும்.

வயதான தோற்றம் :
வெயிலில் அதிகப்படியாக இருப்பவர்களுக்கு ஆக்னி ஏற்படும் அத்துடன் சருமம் வறண்டு விரைவிலேயே வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இதனை தவிர்க்க தினமும் அரிசி கழுவிய நீரில் முகம் கழுவலாம்.

குழந்தைகளுக்கு :
அரிசி கழுவிய தண்ணீருடன் இன்னும் கொஞ்சம் சாதாரண தண்ணீரை சேர்த்து குழந்தைகளை குளிப்பாட்ட பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு சரும நோய்கள் வராமல் தடுப்பதுடன் நல்ல தூக்கத்தையும் ஏற்படுத்தும்.