வீட்டிலேயே சிக்கன் நகட்ஸ் எப்படி செய்யலாம்?

வீட்டிலேயே சிக்கன் நகட்ஸ் எப்படி செய்யலாம்?

வீட்டிலிருக்கும் பெண்கள், எதாவது வித விதமாக சமைத்து, வீட்டில் உள்ளவர்களை ருசியால் அசத்த வேண்டுமென ஆசைகொள்வார். அனைவரும் அறிந்த சிக்கன் கறி, சிக்கன் கபாப் யம்மி டேஸ்டினை தந்து, உங்கள் வயிற்றினை நிரப்பி விடும்.

இந்த சிக்கன் நகட்ஸ், ஆரோக்கியமாகவும் அத்துடன் சத்துள்ளதாகவும் அமைந்து நம் மனதில் நீங்கா இடத்தினை பிடிக்கிறது.
உங்கள் வீட்டிலேயே ஆரோக்கியமான மற்றும் டேஸ்டியான சிக்கன் நகட்ஸினை, நீங்கள் சமைத்து மகிழலாம்.

தேவையான பொருட்கள்:
சிக்கன்
தயிர் – 1 கப் (கெட்டியானது)
தண்ணீர் – ¼ கப்
உப்பு – 1 டீ ஸ்பூன்

சிக்கன் நகட்ஸுக்கு தேவையான பொருட்கள்:
கோழியின் மார்புப்பகுதி – 250 கிராம்
கோதுமை மா – ½ கப்
மிளகு தூள் – ½ டீ ஸ்பூன்
கரம் மசாலா – ½ டீ ஸ்பூன்
இஞ்சி மற்றும் பூண்டு பேஸ்ட் – ½ டீ ஸ்பூன்
முட்டை – 1
பிஸ்கட் தூள் – ¾ கிராம்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
1. கடிப்பதற்கு உகந்த அளவில் கோழி மார்பகங்களை நறுக்கவேண்டும்.
2. கெட்டியான தயிர், தண்ணீர் மற்றும் உப்பை மிக்ஸ் பண்ணி ஒரு கரைசல் போல் வைத்துகொள்ள வேண்டும். அந்த கரைசலில் சிக்கன் துண்டுகளை ஓர் இரவு அல்லது 2 மணி நேரமாவது குளிர்சாதனபெட்டியில் வைக்க வேண்டும்.
3. அதன்பின் கோழித்துண்டுகளை மட்டும் தனியாக எடுத்துவிட்டு, அந்த கரைசலை வடிகட்ட வேண்டும். பிறகு, ½ அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் கரம் மசாலாவை சிக்கன் பீஸ்களுடன் சேர்த்து முழுவதுமாக மிக்ஸ் பண்ண வேண்டும். இந்த முறைகளை கொண்டு நம்மால் கோழி பீஸ் ஸாப்டாக இருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொண்டு, வறுக்க உகந்ததா என்பதனையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

4. ஒரு பௌலில் மாவை எடுத்துக்கொள்ள வேண்டும். மீதமிருக்கும் உப்பு,மிளகு தூள் மற்றும் கரம் மசாலாவை நன்றாக மிக்ஸ் பண்ணி கொள்ள வேண்டும்.

5. மற்றுமொரு பௌலில் நன்றாக வடிகட்டப்பட்ட சிக்கன் பீஸை எடுத்துகொள்ள வேண்டும். மீதமிருக்கும் மிளகு தூளையும் , உப்பையும் அதோடு சேர்க்க வேண்டும். அத்துடன் கரம் மசாலாவையும் பௌல் முழுவதும் எல்லா இடங்களிலும் பரவுமாறு மிக்ஸ் பண்ண வேண்டும்.
6. இன்னொரு பௌலை எடுத்துகொள்ளுங்கள். முட்டையை உடைத்து அதில் ஊற்றி கொள்ளுங்கள்.

7. மூன்றாவது பௌலில் பிஸ்கட் தூளினை சேர்த்துகொள்ள வேண்டும்.

8. இப்பொழுது சிக்கன் மார்பு பீஸ்களை எடுத்துகொண்டு, அதனை அந்த பீஸ்கள் முழுவதும் படுவது போல் மாவோடு நன்றாக உருட்ட வேண்டும்.

9. இப்பொழுது சிக்கன் பீஸ்களை, நன்றாக முட்டை உடைத்து கூளாக்கப்பட்டிருக்கும் பௌலில் முக்க வேண்டும்.
10. முட்டை பூசப்பட்ட துண்டுகளை… (ரொட்டி துண்டுகள்) வைக்க வேண்டும். அதன் பின்னர் நன்றாக உருட்ட (முழுவதுமாக மூடப்படும்படி உருட்ட) வேண்டும்.

11. இந்த முறையை தொடர்ந்து செய்து…அனைத்து சிக்கன் பீஸ்களையும் ப்ரட் க்ரம்பை கொண்டு மூட வேண்டும்.

12. சில நிமிடங்கள் கழித்து…ரொட்டி துண்டுகளை (ப்ரட்க்ரம்ப்) கொண்டு முழுவதுமாக சிக்கன் பீஸ்கள் மூடப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

13. இப்பொழுது பீஸை வெளியில் எடுத்து…நன்றாக குலுக்கி, எக்ஸ்ட்ரா இருக்கும் ப்ரட் க்ர்ம்ப்களை நீக்க வேண்டும்.

14. மெதுவாக சிக்கன் பீஸை அடுப்பில் போட்டு… மிதமான சூட்டோடு எண்ணெயை அதில் ஊற்ற வேண்டும். ஒருவேளை எண்ணெய் மிகவும் சூடாக இருக்குமெனில், நக்கட்டின் வெளிப்புறம் ப்ரௌன் கலரில் மாறிவிடும். அப்பொழுது…உள்ளே சரியாக வேக வாய்ப்பில்லை என்று அர்த்தம்.

15. மேலும் 5 பீஸ்களை அடுப்பில் போட்டு வறுக்க வேண்டும். அதன் நிறம், கோல்டன் ப்ரௌன் கலர் வரும்வரை நன்றாக வறுக்க வேண்டும்.

சிக்கன் நகட்ஸ் ரெடி….