ஜப்பானினை சுழற்றியடிக்கும் தாலிம் புயலால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு..

ஜப்பானினை சுழற்றியடிக்கும் தாலிம் புயலால் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு..

பசுபிக் பெருங்கடலில் உருவான தாலிம் புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கனமழை மற்றும் புயல்காற்று வீசலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு விமான, ரயில் சேவைகள் முழுதும் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பசுபிக் பெருங்கடலில் 18-வது புயலாக தாலிம் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் ஜப்பானின் தெற்கு பகுதிகளில் உள்ள தீவான யுஷு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக காற்று வீசும் எனவும், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, விமான சேவைகள் மற்றும் புல்லட் ரயில்கள் உட்பட நூற்றுக்கணக்கான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த புயல் வலுவடைந்து இன்று(18) மாலை கிழக்குப் பக்கமாக அதாவது தலைநகர் டோக்கியோ நோக்கி நகரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புயலின் பாதையில் உள்ள நகரங்களில் வசிக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

(rizmira)