ரோஹித்த ராஜபக்ஷவின்  செய்மதி செயற்திட்டத்துக்கு மின்சார சபையினால் பணம் மோசடி..

ரோஹித்த ராஜபக்ஷவின் செய்மதி செயற்திட்டத்துக்கு மின்சார சபையினால் பணம் மோசடி..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மூன்றாவது புதல்வர் ரோஹித்த ராஜபக்ஷவின் செய்மதி செயற்திட்டத்துக்கு மின்சார சபையின் பணம் மோசடியான முறையில் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மின்சார சபை ஓய்வு பெற்றோர் நலன்புரி சங்கத்தின் வருடாந்த சம்மேளனம் நேற்று(17) நடை பெற்றது.

இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக மேற்குறித்த தகவலை வௌியிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமான பணத்தைக் கொள்ளையடித்தார்கள். மறுபுறத்தில் அரசாங்கத்துக்கு பல்வேறு வழிகளில் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

ரோஹித்த ராஜபக்‌ஷ அனுப்பியதாக தெரிவிக்கப்படும் செய்மதி செயற்திட்டம் அதுபோன்ற ஒன்றாகும். மின்சார சபையின் 460 பில்லியன் ரூபா பணம் மோசடியான முறையில் அதற்காக செலவிடப்பட்டிருந்தது.

அது தொடர்பாக முறைப்பாடொன்றைச் செய்துள்ளேன். மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் சம்பிக ரணவக தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)