‘கவர்ஸ் கோப்பரேஷன்’ விவகாரம் – பணிப்பாளர்களின்றி வழக்கை விசாரிக்க தீர்மானம்..

‘கவர்ஸ் கோப்பரேஷன்’ விவகாரம் – பணிப்பாளர்களின்றி வழக்கை விசாரிக்க தீர்மானம்..

‘கவர்ஸ் கோப்பரேஷன்’ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் இருவரும் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சாட்சிகள் அறிவித்ததையடுத்து அவர்கள் இல்லாமலேயே வழக்கை விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

வெளிப்படாத வகையில் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்து நிதி திரிபுபடுத்தல் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவோடு குற்றம் சுமத்தப்பட்ட கவர்ஸ் கோப்பரேஷன் நிறுவனத்தின் இரு பணிப்பாளர்கள் இல்லாமலேயே சம்பந்தப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று(18) தீர்மானித்துள்ளார்.

கவஸ் கோப்பரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர்களான இந்திக்க பிரபாத் கருணாஜீவ மற்றும் ஒரத்தெல்லா இரேஷா சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் வெளிநாட்டில் மறைந்திருப்பதாக சாட்சிகள் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து நீதிபதி மேற்படி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

2013 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மற்றும் 2014 ஆகஸ்ட் 31 ஆம் திகதி உட்பட்ட காலங்களில் கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உரித்தான கவஸ் கோப்பரேட் சேர்விஸஸ் நிறுவனம் வேறொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலின் போது, முறையற்ற விதத்தில் நிதியை பெற்றுக் கொள்ள சூழ்ச்சி செய்தமைக்காகவும் இதன் மூலம் 30 மில்லியன் ரூபாவை சம்பாதித்துக் கொண்டமைக்காகவும் மேற்படி சட்டத்தின் மூலம் பிரதிவாதிகளுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தொடுத்திருந்தார்.

இவ்வாறு வெளிப்படாத வகையில் முறையற்ற விதத்தில் சம்பாதித்த 30 மில்லியன் ரூபாவில் ‘ஹலோ கோப்’ நிறுவனத்தை கொள்வனவு செய்துள்ளதாக சட்டமா அதிபரினால் பிரதிவாதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

 

(rizmira)