வாகன சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

வாகன சாரதிகளுக்கு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

குருநாகல் – புத்தளம் பாதையில் தெதுறு ஓயா பாலம் புனரமைக்கப்பட உள்ளதால் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

குருநாகல் – புத்தளம் பாதையில் தெதுறு ஓயாவிற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று(25) காலை 6.00 முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 6.00 வரை அந்தப் பாலம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த இந்தக் காலப் பகுதிக்குள் வாகனங்கள் பாதனிய – அனுராதபுரம் வீதியின் ஊடாக சென்று பலல்ல – நிக்கவரட்டி – எலவக்க பாதையைப் பயன்படுத்த முடியும்.

கனரக வாகங்கள் பாதனிய – அனுராதபுரம் பாதையில் தலதாகம ஊடாக நிக்கவரட்டிய பாதையைப் பயன்படுத்த முடியும் என்று குருநாகல் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)