பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்…

பேஷியலின் வகைகளும் சிறப்பம்சங்களும்…

பெண்கள் தங்கள் முகப்பொலிவை அழகுபடுத்துவதில் அலாதி இன்பம் அடைகின்றனர். பெண்கள் விரும்பும் பேஷியலின் வகைகளையும் அறிந்து கொள்ளலாம்.

முன்பு முக்கிய நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் இன்று கிராம வீதிகளில் கூட உள்ளன. அந்த அளவிற்கு அழகு நிலையங்களில் அணிவரிசை என்பது உலக புகழ்பெற்றது முதல் உள்ளூர் நிறுவனம் வரை என பெரிய வரிசையில் உள்ளன.

பேசிக் கிளினிக்:-
இதில் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படுவது, அழுக்குகள், கருந்துகள்கள் போன்றவை அகற்ற உதவி புரியும். எந்த பேஷியல் செய்வதற்கு முன்பும் இந்த பேசிக் கிளினிங்கை செய்வது அவசியம்.

நார்மல் பேஷியல்:-
மேற்சொன்னதைவிட சற்று அதிகபடியான மசாஜ் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் தோலின் ஆரோக்கியம் மற்றும் பொலிவு மேம்படும்.

ஃபாராப்பின் பேஷியல்:-
ஃபாராப்பின் அடிப்படையாக கொண்ட முகப்பூச்சு பூசப்பட்டு செய்யப்படும் பேஷியல் இதன் மூலம் தோலின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுவதுடன் வயதான தோற்றத்தை நீக்குகிறது. இந்த பேஷியல் மூலம் பிரகாசம் வீசும் மென்மையான சருமம் கிடைக்கும்.

பயோலிப்ட் பேஷியல்:-
இது தொய்வடைந்த சருமத்திற்கு ஏற்றதாகும். இதனை பேஸ் லிப்ட் என்றும் கூறுவர். இதன்பின் சருமம் நிறத்துடன் மற்றும் நிலைத்த தன்மையுடன் காணப்படும்.

முகப்பரு பேஷியல்:-
முகப்பரு மற்றும் கரும்புள்ளி உள்ளவர்களுக்கானது. சுத்தம் செய்யப்பட்ட முகத்தின் மீது கிளைகோலிக் ஆசிட் முகப்பருக்கள் உள் செல்லுமாறு செய்யப்பட்டு அதன்மீது ஆன்டி-பேக்டிரியல் மாஸ்க் போடப்படும். இந்த பேஷியலில் மசாஜ் தேவையில்லை. வாரம் இருமுறை செய்ய நல்ல பலன் கிடைக்கும்.