சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை..

சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை..

சேமியாவை வைத்து கிச்சடி, உப்புமா, பாயாசம் செய்து இருப்பீங்க. இன்று சேமியாவை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சேமியா – கால் கப்
மைதா – ஒரு மேஜைக்கரண்டி
தேங்காய்த் துருவல் – ஒரு மேஜைக் கரண்டி
பூண்டு – 1
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1
கொத்துமல்லி இலை – சிறிதளவு.

செய்முறை :
சேமியாவை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு, வேக வைத்து கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தையும், கொத்தமல்லி, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டை இடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த சேமியா, பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு, மைதா சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் மாவை வடையாக சேமியா கலவையைத் தட்டி, எண்ணெயில் போட்டு, இருபுறமும் திருப்பி வேக வைத்து எடுக்கவும்.

சூப்பரான சேமியா வடை ரெடி…