213 பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு…

213 பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு…

அசாம் மாநிலம், கவுகாத்தியில் சமீபத்தில் நடந்த GST கவுன்சிலின் 23 வது கூட்டத்தில் 213 பொருட்களின் வரி விகிதங்களை மாற்றி அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்துகிற 178 பொருட்களின் வரி விகிதம் 28% – 18 #% ஆகவும், 2 பொருட்களின் வரி விகிதம் 28% -12% ஆகவும், 13 பொருட்களின் வரி விகிதம் 18% -12% ஆகவும், 6 பொருட்களின் வரி விகிதம் 18% – 5%ஆகவும், 8 பொருட்களின் வரி வகிதம் 12% – 5%ஆகவும் மாற்றப்பட்டது. 6 பொருட்களுக்கு 5% வரி விதிப்பு விலக்கி கொள்ளப்பட்டது.

குறித்த இந்த வரி குறைப்பு சலுகை மக்களை சென்றடைய வேண்டும் என மத்திய அரசு கருதி, வருவாய்த்துறை முறைப்படி அறிவிக்கை வெளியிட்டது. அதன்படி புதிய வரி விதிப்பு மாற்றங்கள் நேற்று முதல் அமுலுக்கு வந்தன.

இதனால் வயர், தளபாடங்கள், மெத்தை, சூட்கேஸ், சலவைத்தூள், ஷம்போ, மின்விசிறிகள், விளக்கு, ரப்பர் டியூப், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, நீரிழிவு நோயாளிகளின் உணவு, மருத்துவ ஆக்சிஜன், மூக்கு கண்ணாடி, தொப்பி, உருளைக்கிழங்கு பவுடர் உள்ளிட்ட 213 பொருட்களின் விலை குறைந்துள்ளது.

அனைத்து உணவகங்களிலும் ஒரே சீராக 5% வரி விதிப்பு அமுலுக்கு வந்துள்ளது.

 

####