பற்கள் மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள்…

பற்கள் மஞ்சளா இருக்கா? ஒரே இரவில் வெள்ளையாக்கும் சில வழிகள்…

புன்னகைக்கும் போது பற்கள் அசிங்கமாக மஞ்சள் நிறத்தில் இருந்தால், எப்படி இருக்கும்? இதற்கு என்ன தான் டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்கினாலும் பற்கள் வெள்ளையாகாது. மாறாக, ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைத் துலக்கினால், பற்களில் உள்ள அசிங்கமான மஞ்சள் கறைகள் அகன்றுவிடும்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை:
ஒரு பௌலில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் டூத் பிரஸ் கொண்டு இந்த கலவையை பற்களில் தடவி 1-2 நிமிடம் கழித்து, வாயை நீரால் கழுவ வேண்டும். இப்படி 10 நாளைக்கு ஒருமுறை செய்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கி, பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.

வாழைப்பழ தோல்:
வாழைப்பழத்தின் தோலை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு துண்டாக எடுத்து பற்களை மென்மையாக 2 நிமிடம் தேய்க்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இந்த மாதிரி தினமும் காலையில் செய்து வந்தால், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் அகலும்.

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயை வாயில் விட்டு, 10 நிமிடம் வாயினுள் கொப்பளிக்க வேண்டும். பின் அந்த எண்ணெயை துப்பி, கை விரலால் பற்களைத் தேய்த்து, பின் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, பற்களும் வெண்மையாக இருக்கும்.

எலுமிச்சை மற்றும் உப்பு:
1 டீஸ்பூன் உப்பில், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பற்களில் தடவி மென்மையாக தேய்த்து, பின் நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்தால், பற்களில் அசிங்கமாக இருக்கும் மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். முக்கியமாக இந்த முறையை அடிக்கடி செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

மஞ்சள்:
சிறிது மஞ்சள் தூளை டூத் பிரஷில் தூவி, பற்களைத் தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து மீண்டும் துலக்கி நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை அகன்று இருப்பதை நன்கு காணலாம். மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஈறுகளில் உள்ள தொற்றுக்களை நீக்கி, வாய் துர்நாற்றத்தையும், ஈறு பிரச்சனைகளையும் தடுக்கும்.

கொய்யா இலைகள்:
1-2 கொய்யா இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் அந்த பேஸ்ட் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும். அதைத் தொடர்ந்து நீரால் வாயைக் கொப்பளித்து, பின் எப்போதும் போன்று பற்களைத் துலக்குங்கள். இப்படி ஒருநாள் விட்டு ஒருநாள் செய்தால், பற்கள் வெண்மையாக இருக்கும்

ஆரஞ்சு தோல்:
ஆரஞ்சு தோலின் உட்பகுதியைக் கொண்டு பற்களை 1-2 நிமிடம் தேய்க்க வேண்டும். பின் பிரஷ் கொண்டு எப்போதும் போன்று டூத் பிரஷ் பயன்படுத்தி பற்களைத் துலக்குங்கள். * இப்படி ஒரு வாரம் ஒரு நாள் விட்டு ஒருநாள் செய்து வர, பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஸ்ட்ராபெர்ரி:
1 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையைக் கொண்டு பற்களைத் தேய்த்து சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு நீரால் வாயைக் கொப்பளிக்கவும். அதைத் தொடர்ந்து எப்போதும் போன்று பற்களைத் துலக்கவும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், பற்கள் எப்போதும் வெள்ளையாக இருக்கும்.