முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…

முகத்தில் எண்ணெய் ரொம்ப வழிந்து கருப்பா காட்டுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க…

உங்களுக்கு இருப்பது எண்ணெய் பசை சருமமா? எவ்வளவு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்தியும் பலன் இல்லையா? கவலையை விடுங்கள். இப்பிரச்சினைக்கு ஆயுர்வேதம் சிலவற்றை பரிந்துரைக்கிறது. அவற்றை எண்ணெய் பசை சருமத்தினர் தினந்தோறும் பின்பற்றினால், நிச்சயம் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.

பால்:
பாலை ஒரு பஞ்சுருண்டையில் நனைத்து முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலையிலும், இரவில் தூங்கும் முன்பும் செய்து வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம். அதிலும் பாலுடன் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கலந்து பயன்படுத்தினால், முகத்தில் உள்ள அதிகளவு எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.

ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தில் உள்ள விட்டமின் சி சருமத்திற்கு மிகவும் நல்லது. ஆரஞ்சு பழத்தின் சாற்றினை ஒரு பௌலில் பிழிந்து எடுத்து, அதனை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி, முகம் பளிச்சென்று காட்சியளிக்கும்.

கற்றாழை:
இந்த செடியின் இலையை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் கழுவி வர, முகத்தில் உள்ள அதிகப்படியாக எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும பிரச்சனைகளும் அகலும்.

தேன்:
ஒரு முட்டையின் மஞ்சள் கருவில் 2 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து ஸ்கால்பில் நேரடியாக தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால், தலையில் இருந்து முகத்தில் எண்ணெய் வழிவதைத் தடுக்கலாம்.

தண்ணீர்:
நீரை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஒரு பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். பின் ஒரு ஐஸ் கட்டியை துணியில் கட்டி, முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு ஒருமுறை என சில வாரங்கள் தொடர்ந்து செய்ய, முகத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

முட்டை மற்றும் எலுமிச்சை:
முட்டையின் வெள்ளைக்கருவுடன், சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவி, அதைத் தொடர்ந்து குளிர்ந்த நீரால் முகத்தை மீண்டும் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம்.

டீ பைகள்:
டீ பைகளைக் கொண்டு டீ தயாரித்த பின், அந்த டீ பைகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் கழித்து நீரால் கழுவுங்கள். இதனால் அதில் உள்ள டானிக் அமிலம், சருமத்துளைகளை அடைத்துள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்துளைகளை சுத்தம் செய்து, முகத்தை பிரகாசமாக காட்டும்.