சங்கா மஹேல மற்றும் திலானை வீழ்த்தி தனஞ்சய முன்னேற்றம்..

சங்கா மஹேல மற்றும் திலானை வீழ்த்தி தனஞ்சய முன்னேற்றம்..

இலங்கை அணி சார்பில், வேகமான டெஸ்ட் ஓட்டங்களில் 1000 ஓட்டங்களை பூர்த்தியாக்கிய வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தினை தனஞ்சய டி சில்வா இன்று(02) கைப்பற்றியுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற டெஸ்ட் போட்டியில், தனது 12 டெஸ்ட் போட்டியாக விளையாடும் தனஞ்சய டி சில்வா அவரது 23வது இன்னிங்சில் 1000 ஓட்டங்களை பூர்த்தி செய்துள்ளார்.

இதற்கு முன்னர் 23வது இன்னிங்சில் 1000 ஓட்டங்களை கடந்த ரோய் டயஸ் (1982), மைக்கல் வென்டோட் (2008) ஆகியோருக்கு மத்தியில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வாவும் தற்போது உள்வாங்கியுள்ளார்.

மஹேல ஜெயவர்தன (24), திலான் சமரவீர (24), குமார் சங்கக்கார (25), தினேஷ் சந்திமால் (25) ஆகியோர் குறைந்த இன்னிங்சில் இலங்கை சார்பில் 1000 ஓட்டங்களை கடந்த வீரர்கள் ஆவர்.

 

#rishma