தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு…

தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு…

தென் ஆப்பிரிக்காவில் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தங்கச் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.

23 நிலைகளைக் கொண்ட இந்த சுரங்கம் தரைமட்டத்தில் இருந்து 1000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. குறித்த சுரங்கத்தில் புதன்கிழமை மாலை திடீரென மின்சாரம் தடைபட்டது.

புயல் காரணமாக மின் கம்பங்கள் சேதமடைந்ததால், உடனடியாக மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டமையினால், சுரங்கத்திற்குள் இருந்து வெளியே தொழிலாளர்களை அழைத்து வரக்கூடிய லிப்டுகள் எதுவும் செயல்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் லிப்ட்டை பயன்படுத்தி சுமார் 300 தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இந்நிலையில், இன்று காலை மின் இணைப்பு கொடுக்கப்பட்டதையடுத்து தொழிலாளர்கள் லிப்ட் மூலம் மேல்தளத்திற்கு வெளியே கொண்டு வரப்பட்டனர்.

இது அதிர்ச்சிகரமான அனுபவம் என்று கூறிய சுரங்க நிர்வாகம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.