அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது..  (Update)

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனு கோரிக்கை பிற்போடப்பட்டது.. (Update)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது பிணை மனு தொடர்பில் எதிர்வரும் 16ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என மனுவை ஆராய்ந்த கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் , குறித்த பிணை கோரிக்கை தொடர்பில் எழுத்து மூல விரிவுரையை எதிர்வரும் வௌ்ளிக்கிழமைக்கு முன்னால் தாக்கல் செய்யுமாறு நீதவான் சட்டமா அதிபரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

++++++++++++++++++++++++++++(update)

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரது பிணை மனுக்கள் இன்று நீதிமன்றிற்கு..

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் நீதிமன்றினால் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 04ம் திகதி கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பேர்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை விடுவிக்குமாறு கோரி இன்று(07) பிணை மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

அதன்படி, குறித்த பிணை மனுவானது இன்று(07) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட உள்ளதாக சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையாகியுள்ள சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸ ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் குறித்த எனது தரப்பினரை கைது செய்ய முடியாது எனத் தெரிவித்து பிணை வழங்குமாறு இதற்கு முன்னரான வழக்கின் போதும் நீதிமன்றில் தான் கோரியிருந்ததாகவும், அதன்படி இன்று(07) பிணை மனுவினை தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பித்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

#rishma