தேர்தலின் போது விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்த முடிவு…

தேர்தலின் போது விசேட அதிரடிப்படையினரையும் பயன்படுத்த முடிவு…

நாளை(10) நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலின் போது தேவையேற்படுமெனில் விசேட அதிரடிப்படையினரைப் பாவிப்போம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்துள்ளார்.

நாடு எங்கிலுமுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்புக்கள் வழங்கப்படுகின்றன. தேவையான இடங்களில் மாத்திரம் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பும் பெற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன என தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எம்.எம்.முஹமட் மட்டக்களப்பில் வைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் 43 அங்கீகரிக்கப்பட அரசியல் கட்சிகளும், 222 சுயேட்சைக்குழுக்களுமாகப் போட்டியிடுகின்றன. நாடெங்கிலும் 57,252 வேட்பாளர்கள், 8,356 உறுப்புரிமைகளுக்காகப் போட்டியிடுகின்றார்கள்.

13,374 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாள 1 லட்சத்து 75ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்களும், அரசாங்க பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர் உட்பட்டவர்களும் வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடவிருக்கிறார்கள்.

 

 

#rishma