பெண்கள் தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை…

பெண்கள் தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை…

சவுதி அரேபியாவில் பெண்கள் சுயமாக தொழில் ஆரம்பிக்க கணவரின் அனுமதி தேவையில்லை என அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

‘வி‌ஷன் 2030’ என்ற மறுசீரமைப்பு திட்டத்தில் பெண்களின் பங்கை மூன்றில் 2 பங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

பெண்களுக்கு பல்வேறு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பெண்கள் தொழில் ஆரம்பிக்க ஆண் பாதுகாவலர் அனுமதி பெற வேண்டும். அதாவது கணவர், தந்தை அல்லது சகோதரன் அனுமதி கடிதத்தை விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும்.

தற்போது பெண்கள் தொழில் ஆரம்பிக்க இத்தகைய அனுமதி கடிதம் தேவையில்லை எனவும் பெண்கள் சுயமாக தொழில் ஆரம்பிக்க எந்த தடையும் இல்லை என சவுதி அரேபியாவின் வர்த்தகம் மற்றும் முதலீட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் சவுதி அரேபியாவில் தனியார் துறைகளை அதிகரித்து பொருளாதார சீரழிவை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.