புளூட்டோ கிரகத்தையும் விட்டு வைக்காத காதல் சின்னம்

புளூட்டோ கிரகத்தையும் விட்டு வைக்காத காதல் சின்னம்

செவ்வாய் கிரகத்தில் பிரமிடு போன்ற தோற்றம் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த கட்டமாக புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் பிரம்மாண்ட காதல் சின்னம் இருப்பது தெரிய வந்துள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு நேற்று காலை நியூ ஹாரிசன் விண்கலம் தனது (LORRI) கெமராவில் பதிவு செய்த புகைப்படம் கிடைத்தது. அதில் புளூட்டோவின் மேற்பரப்பில் உலக காதலர்களின் காதல் சின்னமான ஹாட்டீன் போன்ற தோற்றம் இருப்பதைப் பார்த்து நாசா விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர்.

8 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்திற்கு பரந்து விரிந்த இந்த காதல் சின்னத்தை ‘திமிங்கலம்’ என்று செல்லமாக விஞ்ஞானிகள் அழைத்து வருகின்றனர். விரைவில் இதன் நெருக்கமான புகைப்படத்தை பெறும் முயற்சியில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

(riz)