அரசியல் சுதந்திரமின்றி நாடு சுதந்திரமடையாது – சம்பிக்க

அரசியல் சுதந்திரமின்றி நாடு சுதந்திரமடையாது – சம்பிக்க

நாட்டின் அரசியல் சுதந்திரம் ஒழுங்கான விதத்தில் இருக்கும் போதே நாடு ஒன்றின் முழுமையான சுதந்திரத்தை அடைய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சுதந்திரம், சமூக சமநிலையை சரியான முறையில் முன்னெடுப்பதும் இதற்கு அவசியமானதாகும். இவற்றில் இலங்கை வலுவின்றிய நிலையிலேயே உள்ளது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இக்கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், கொள்கை சார்ந்து செயற்படும் போதே வரலாறு உருவாக்கப்படும். எதிர்காலத்தை நோக்கி செல்ல இலங்கைக்கு தற்போது பெறுமதிமிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இலங்கையின் சமூக சுட்டெண் சிறந்த இடத்தில் உள்ளது.

இதனை வெற்றிக்கொள்ள முதலாம் உலக நாடுகளான அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் போன்ற எந்த நாடுகளுக்கும் முடியாது போயுள்ளது.

முன்னேற்றமடைந்த சமூகத்திற்கு ஏற்ற முன்னேறிய அரசியல் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இவ்வைபவத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

(riz)