கரையோரப் பகுதிகளுக்கு 70-80Km வேகத்தில் காற்று வீசும்…

கரையோரப் பகுதிகளுக்கு 70-80Km வேகத்தில் காற்று வீசும்…

ஹம்பாந்தோட்டை முதல் மன்னார் வரையிலான காலி, கொழும்பு பகுதிகளில் மணிக்கு 70-80Km வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று(13) அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது.

இதனால் அடுத்து வரும் மணித்தியாலங்களில் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதி கடற்பரப்பு கொந்தளிப்பானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அடுத்துவரும் இரண்டு நாட்களில் கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்றொழில் நீரியல்வள அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Media preview

 

#rishma