பாடசாலை பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு…

பாடசாலை பேருந்து விபத்து – குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு…

ஹிமாச்சல் பிரதேசத்தில் மால்க்வால் பகுதியில் சுமார் 60 மாணவர்களை ஏற்றிச் சென்ற பாடசாலை பேருந்து ஒன்று நேற்று(09) மாலை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், , 27 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்தின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.