பிரதமருக்கு எதிரான, ஸ்ரீ.சு.கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(18) கூடுகின்றனர்…

பிரதமருக்கு எதிரான, ஸ்ரீ.சு.கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று(18) கூடுகின்றனர்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து நல்லாட்சி அரசின் பதவிகளில் இருந்து விலகிய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேரும் எதிர்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட இன்று(18) இரவு ஒன்று கூடவுள்ளதாக குறித்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது தேசிய அரசாங்கத்துடன் சேர்வதா? இல்லையா? என்ற தீர்மானம் குறித்து ஆராய கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்றினை விடுக்கவுள்ளதாகவும், அது குறித்தும் இன்று ஆராய உள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் சுற்றுப் பயணத்தினை பூர்த்தி செய்து எதிர்வரும் 21ம் திகதி நாடு திரும்பவுள்ளதோடு, இதன் பிற்பாடு மத்திய செயற்குழுக் கூட்டம் கூடும் என எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.