பண்டிகை கால பேரூந்து சேவைகள் 24 ஆம் திகதி வரை நீடிப்பு…

பண்டிகை கால பேரூந்து சேவைகள் 24 ஆம் திகதி வரை நீடிப்பு…

பண்டிகை காலப்பகுதியில் தமது சொந்த இடங்களுக்கு சென்ற பொது மக்களின் வசதி கருதி முன்னெடுக்கப்பட்ட விசேட பேரூந்து சேவைகள் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதற்காக சுமார் 15 ஆயிரம் பேரூந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, கண்டி, குருநாகல், அங்குராங்கெத்த, காலி ,மாத்தறை உள்ளிட்ட கிராம பிரதேசங்கள் பலவற்றிற்கு மேலதிக பஸ் சேவைகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இதற்கு முன்னர் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவையில் ஈடுப்படுத்தப்பட்ட பஸ்கள் தற்போது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகளின் தேவைக்கு அமைவாக பிரதேசம் மற்றும் தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவை இடம் பெற்று வருவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தூர இடங்களுக்கான பஸ் சேவையில் அறவிடப்படும் கட்டண தொகையில் பிரச்சினை இருக்குமாயின் அவை தொடர்பாக 1955 என்ற தொலைபேசியினூடாக அறிவிக்க முடியும்.